ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த அரசு ஊழியர்...

நெல்லை மாவட்டம் காவல்கிணறு ரயில் நிலையம் அருகே அரசு ஊழியர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த அரசு ஊழியர்...
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி துணை  அலுவலராக கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு ஊரைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவர் வேலை பார்த்து வந்தார்
இவர் இன்று காலை வழக்கம்போல் அலுவலகம் வந்து அலுவலகத்தில் கையெழுத்து இட்டு அருகிலுள்ள பரமேஷ்வரபுரம் எனும் கிராமத்திற்கு ஆய்வு பணிக்கு செல்வதாக தன்னுடைய மேலதிகாரிக்கு தகவல் சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் நண்பகல் ஒரு மணி அளவில் காவல்கிணறு ரயில் நிலையம் அருகே ஒரு ஆண் சடலம் ரயிலில் அடிபட்டு கிடைப்பதாக ரயில்வே கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அதில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சந்தோஷ் குமார் எனவும் இவர் அரசு ஊழியர் என  தெரியவந்தது. அதனைதொடர்ந்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தோஷ்குமார் பணியின் மேல் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை செய்துகொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com