ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு; வருவாய்துறை அதிரடி!

ஆலந்தூரில் ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மீட்டுள்ளனர். 

சென்னையை அடுத்த ஆலந்தூர் கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் கடந்த 1967ம் ஆண்டு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பின் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த நிலத்தில் தேனீர் விடுதி, பரிசோதனை கூடம், வாகனங்கள் பழுது பார்க்கும் மையம் உள்பட 17 கடைகள் இருந்தன. 

இந்நிலையில் குத்தகை காலம் முடிந்ததால் ரூ. 35 கோடி அரசுக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் வந்து பூட்டி கிடந்த கடைகளின் பூட்டைகளை அகற்றி வருவாய் துறை முலம் பூட்டு போட்டு சீல் வைத்தனர். 

மேலும் திறந்து இருந்த டீக்கடைகளில் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.  ரூ. 150 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலத்தை மீட்கப்பட்டதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க:800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு