கோதுமை தட்டுப்பாட்டை போக்க 15 ஆயிரம் மெட்ரிக் டன் அரசே கொள்முதல் செய்யும் - அமைச்சர்

கோதுமை தட்டுப்பாட்டை போக்க 15 ஆயிரம் மெட்ரிக் டன் அரசே கொள்முதல் செய்யும் - அமைச்சர்

தமிழ்நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டை போக்க வரும் ஆண்டுகளில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம்.

Wheat… Who can eat? Who can avoid ? | Anil Foods

அமைச்சர் சக்கரபாணி பேட்டி.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் மண்ணெண்ணெய் அளவு 59 ஆயிரத்து 812 கிலோ லிட்டராக இருந்தது. இது 2021ல் 7,510 கிலோ லிட்டராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டரிலிருந்து தற்போது 2712 கிலோ லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மண்ணெண்ணையை தமிழ்நாடு அரசு தான் ஏதோ குறைத்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Is Kerosene Flammable and How Should It Be Stored?

தற்போது தமிழ்நாடு அரசுக்கு 9000 மேற்பட்ட கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது.தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர்.திமுக ஆட்சி அமைந்த பிறகு 29 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கக்கூடிய நிலையில் மண்ணெண்ணெய் வழங்கக்கூடிய அளவை குறைத்துள்ளது.மத்திய அரசின் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளத்தால் ஏழை எளிய மக்கள் பாதிப்புகுள்ளாகி உள்ளனர்.  குறிப்பாக மலைப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இற்காக 2 முறை கடிதமஎழுதியும் அதை கருத்தில் கொள்ளவில்லை.

மேலும் படிக்க | பிரிந்து சென்ற காதலி - குத்தி கொல்ல முயன்ற மாமாகுட்டி - 5 ஆண்டு சிறை

பொருளாதார நெருக்கடி, நிதிச்சுமைகளுக்கு இடையேயும் ஏழை எளிய மக்களின் நலன் கருதி பொது விநியோக திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருள்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல கோதுமை அளவும் 30 ஆயிரத்து 636 மெட்ரிக் டன் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 8132 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்ற சாதனையை எட்டும்.கோதுமை தட்டுப்பாட்டை போக்க வரும் ஆண்டுகளில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம்.

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை, உளுந்து, துவரம் பருப்பு கிடைக்கவில்லை: பொதுமக்கள்  அவதி | Ration shops are not available sugar pulses

நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அடுத்த மாதம் சோதனை முறையில் துவங்கப்பட உள்ளது", என்றார்.