ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையானவர்...தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் - அண்ணாமலை பேட்டி!

ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையானவர்...தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் - அண்ணாமலை பேட்டி!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவானது ஆளுநரின் கருத்துகளை ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட மசோதா என்பது மிக முக்கியமானது, அதனை ஆளுநர் கூறியுள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிக்க : செந்தில் முருகனை நீக்கிய ஓபிஎஸ்...ஈபிஎஸ் முன்பு அதிமுகவில் இணைவு!

தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆளுநர் ஆதரவாக உள்ளார் என கூறுவது தவறானது என்றும், ஆளுநர் ஆர் என் ரவி நேர்மையானவர் என்றும் கூறிய அண்ணாமலை, ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.