மேற்குவங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநர் - தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மேற்குவங்க மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிய  ஆளுநரின் செயல் கண்டனத்திற்கு உரியது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநர்  - தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பேனர்ஜி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கும்  நிலையில்  நேற்றைய கூட்டத்தொடரின் போது,  அரசியல் நிர்ணய சட்டப்பிரிவு 174 அடிப்படையில்  சட்டசபையை  காலவரையறையின்றி முடக்குவதாக ஆளுநர் அறிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க ஆளுநரின் செயல்பாடுகள் விதிமுறைகள் மற்றும் அரசியல் மரபுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். மேலும்  ஆளுநர் அரசியலமைப்புக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அரசுக்கு உரிய மரியாதை கொடுப்பதே ஜனநாயகத்தின் அழகு என பதிவிட்டுள்ளார்.