மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை...ஆளுநர் போட்ட உத்தரவு...!

மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை...ஆளுநர் போட்ட உத்தரவு...!
Published on
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒரு ஆண்டுக்குள் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமித்து, அறியப்படாத வீரர்களை அடையாளம் காணவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கு ஃபெல்லோஷிப் வழங்கப்படும் எனவும், சிறந்த அறிக்கைகளை சமர்ப்பிப்போர், ராஜ்பவன் விழாவில் கவுரவிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com