ஜூன், ஜூலைக்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கடிதம்...! கர்நாடகா நீர் வழங்குமா?

ஜூன், ஜூலைக்கான தண்ணீரை திறந்து விடக்கோரி கடிதம்...! கர்நாடகா நீர் வழங்குமா?

காவிரியில் இருந்து ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்கு 34 டிஎம் சி அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என அம்மாநில துணை முதலமைச்சர் சிவகுமார் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச் சி அடைந்த விவசாயிகள், காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையும் படிக்க : தே சிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? - வைகோ கண்டனம்

இந்நிலையில், தமிழ்நாடு அர சின் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா, மத்திய நீர்வளத் துறை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜூலை மாத பங்கீடான 34 டி.எம். சி. தண்ணீரை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் வழங்கவேண்டிய 9.19 டி.எம். சி. தண்ணீரையும் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.