ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து...!

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து...!
Published on
Updated on
1 min read

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் , ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈஸ்டர் திருநாள் சமூக நல்லிணக்கத்தை ஆழப்படுத்தட்டும் என்றும் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களை நினைவில் கொள்வோம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை மேலோங்க ஈஸ்டர் திருநாளில் உறுதி ஏற்போம் என்றும், நற்கருத்துகளைப் போதித்த இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், ஈஸ்டர் கொண்டாடும் மக்களுக்கும் அவர்களுடைய அன்பிற்குரியவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்த ஈஸ்டர் பண்டிகையானது அனைவருக்கும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை அளிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com