புழல் மத்திய சிறையில் வேர்க்கடலை அறுவடை...!

புழல் மத்திய சிறையில் வேர்க்கடலை அறுவடை...!

புழல் மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை சிறை அதிகாரிகள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது. சிறையில் எண்ணெய் கூடத்தில் பயன்படுத்த உள்ளதாக தகவல்.

சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 900 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிறையில் பல்வேறு தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 

Human rights panel finds 91 prisoners with broken bones in Chennai prison-  The New Indian Express

இந்நிலையில் சிறையில் உள்ள தண்டனை கைதிகள் 10 பேர் குழுவாக இணைந்து சுமார் 50 சென்ட் நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு வந்தது. இந்த பயிர் அறுவடை செய்யப்பட்டு வேர்க்கடல்கள் எடுக்கப்பட்டது. இந்த வேர்க்கடலைகளை சிறையில் உள்ள எண்ணெய் தயாரிப்பு கூடத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Monkey Nuts Recalled Because People Don't Realize They're Actually Peanuts

இதனை சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ், அலுவலர் திருமலை உள்பட பலர் வேர்கடலை அறுவடை செய்ததை பார்வையிட்டு கைதிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதையும் படிக்க     | சேலத்தில் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு....!