வனப் பயிற்சியாளரக்கான குரூப் 4 தேர்வு இன்று தொடக்கம்...

வனப் பயிற்சியாளரக்கான குரூப் 4 தேர்வு இன்று தொடக்கம்...
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு முழுவதும் 10 பணியிடங்களுக்கான வனப் பயிற்சியாளர் குரூப் 4 தேர்வு இன்று தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் வனப் பயிற்சியாளர் காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் வெறும் 10 பணியிடங்களே உள்ள நிலையில் இத்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும் நடைபெற இருக்கிறது.

குரூப் 4 தேர்வு :

தேர்வின் முதல் தாள் தேர்வு டிசம்பர் மாதம் நான்காம் தேதி காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும்.இரண்டு மற்றும் மூன்றாம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காலை மற்றும் மதிய வேளைகளில் நடைபெறும் மற்றும் டிசம்பர் 11ஆம் தேதி காலை நடைபெறும்.மொத்தம் 14 ஆயிரத்து 37 பேர் இந்த பணிக்காக விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்தொழில் பழகுனருக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும், விண்ணப்பமும் வெளியிடப் பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி 6/9/2022 அன்று முடிந்தது.

இந்நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாக மொத்தம் 14 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று தேர்வு நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com