அப்போது காரில் 14 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த காரையும், காரில் இருந்த இளைஞரையும் போலீசார், தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இளைஞர், நாகர்கோவில் அருகே உள்ள மரிச்சென்விளை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பது தெரிய வந்தது. மேலும் சந்தோஷ் மீது குட்கா கடத்தியதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் காரில் குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.