எம்மதமும் சம்மதம்!!! மனதை உருக்கிய சம்பவம்!!!

ஓசூரில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடந்து வரும் நிலையில், கடும் வெயிலுக்கு இதமாக இந்து அமைப்பினருக்கு குளிர்பானங்கள் வழங்கினர் இஸ்லாமிய சகோதரர்கள்.

எம்மதமும் சம்மதம்!!! மனதை உருக்கிய சம்பவம்!!!

ஓசூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலைகள் அனைத்தும் ஓசூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஓசூர் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் இன்று வெயில் சுட்டெரித்தது. ஊர்வலத்தில் சென்ற பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தாகத்தை தணிக்க தண்ணீர் பாட்டில்களை தேடி அலைந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. இதனிடையே ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து அமைப்பினர் மற்றும் விநாயகர் ஊர்வலத்தை காண வந்த பொதுமக்களுக்கு ஓசூர் பகுதி முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.

அதனை இந்து அமைப்பினரும் மகிழ்ச்சியோடு பெற்று வாங்கி குடித்து சென்றனர். பாதுகாப்புக்காக வந்திருந்த காவலர்களுக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் குளிர்பானங்களை வழங்கினர். மேலும் ஜாமியா மஸ்ஜித் பள்ளி வாசல் சார்பில் விநாயகர் ஊர்வலம் சென்ற இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது.