ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு சில டிப்ஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு சில டிப்ஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!
Published on
Updated on
1 min read

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

விளையாடி மக்களை உற்சாகப்படுத்திய ஸ்டாலின்:

சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்பது கடைபிடிக்கப்பட்டு நடனம், பாட்டு, இசைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்று  சென்னை  அண்ணாநகரில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியை நேரில் ஆய்வு செய்ய சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.

மக்களுக்கு அறிவுரை: 

பின்னர் மக்களிடம் உரையாற்றிய அவர், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், உணவுப் பழக்கங்கள் பற்றி பேசிய அவர், முழு பசியுடன் சாப்பிட அமர்ந்து குறை பசியுடன் எழுந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com