அதிமுக சட்ட விதிகளின் படி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தேர்வு...ஜெயக்குமார்...!!

அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் போட்டியின்றி இன்று தேர்ந்தெடுக்கப் பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்ட விதிகளின் படி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தேர்வு...ஜெயக்குமார்...!!

சென்னை மெரினாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடத்தில்  மரியாதை செலுத்திய பிறகு  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்

தேர்தலை பொறுத்தவரை அதிமுகவின் சட்டதிட்டங்கள் படி தான் நடைபெற்றது இதில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே எங்கள் கருத்துகளை நீதிமன்றத்தில் கூற நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

ஜனநாயக ரீதியாக எங்கள் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இது சிலரின் கண்களுக்கு  உறுத்துல், சிலருக்கு தூக்கம் இல்லை என்றும், தவறுகள் ஏதேனும் நடக்குமா என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் அதனால் தான் நீதிமன்றம் சென்றுள்ளார்கள் நாங்கள் அதை எதிர்கொள்வோம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலாவின் நீலி கண்ணீர் அதிமுக தொண்டர்களிடம் எடுபடாது எனவும் ஜெயக்குமார்  திட்டவட்டமாக கூறினார்.