பயணி, நடத்துனர் இடையே கடும் வாக்குவாதம்.. பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு!!
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் நபர் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர், டிக்கெட் எடுக்க மறுத்ததால், நடத்துனருக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், அந்த நபர் தாக்கியதில் நடத்துனர் மயங்கி விழுந்தார்.
இதனை அறிந்த அந்த நபர், மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியில் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளான நடத்துனர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பயணியை தாக்கி விட்டு தலைமறைவான சூனாம்பேடு பகுதியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.