அதிமுக, திமுகவினர் இடையே கடும் மோதல்....ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு....

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அதிமுக, திமுகவினர் இடையே கடும் மோதல்....ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு....

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு திரும்ப பெறுவது மற்றும் சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழாவது வார்டான மேலபுத்தநேரியில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் உட்பட 8 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் திமுக வேட்பாளர் பகவதிக்கு சுயேட்சை வேட்பாளர்கள் என 6 பேர் வாபஸ் பெற்ற நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் நாகமணி என்பவர் அதிமுகவினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதனிடையே திமுக வேட்பாளர் பகவதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எண்ணிருந்த போது, சுயேட்சை வேட்பாளரை அதிமுகவினர் அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு,ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருத்தரப்பினரிடமும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.