சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன்படி கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதானால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

இதேபோல் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மப்பேடு, பேரம்பாக்கம், பெரியகுப்பம் மணவாள நகர், மேல்நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.