நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை...!

நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை...!

அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அடுத்த 3  நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்…! யார்? யார்?