கோபியில் வெளுத்து வாங்கிய கனமழை- 5,000 மூட்டைக்கும் அதிகமான நெல்மணிகள் சேதம்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், விடிய விடிய பெய்த கனமழையால், நெல் கொள்முதல் மையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் முற்றிலும் மழையில் நனைந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள தனியார் அரிசிஆலை வளாகத்தில், கடந்த சில ஆண்டுகளாக அரசு நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் செய்யப்பட்டு வரும் நிலையில், கொள்முதல் மையத்தில் போதிய இட வசதி இல்லாததால், தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண் தரையில் தார்பாயை போட்டு, அதில் ஆயிரக்கணக்கான மூட்டை நெல்மணிகளை கொட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அப்பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததில், சுமார் 5 ஆயிரம் மூட்டை அளவிலான நெல்மணிகள், முற்றிலும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால், கவலையடுத்துள்ள விவசாயிகள், அரசு கொள்முதல் மையத்தில் நெல்லை கொட்டி வைப்பதற்கு பாதுகாப்பான கட்டிடம் இல்லாததால், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும், அரசு பாதுகாப்பான இடத்திற்கு நெல் கொள்முதல் மையத்தை மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.