கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க : தமிழகமெங்கும் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூா், நீலகிாி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.