சென்னையில் நாளை வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

இன்று வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு  மையம், சென்னையில், நாளை வரை அவ்வப்போது இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை வரை இடிமின்னலுடன் கூடிய கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர், சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை, நாளை வரை இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை அவ்வப்போது பெய்யக் கூடும் எனவும் அறிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று 50 கி. மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.