சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை எச்சரிக்கை...

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை எச்சரிக்கை...

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

29ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

30ஆம் தேதி அன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,1ஆம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செண்டி மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், செங்கல்பட்டு, செய்யூரில் தலா 18 செண்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் பல இடங்களில் 10 செண்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது.