உறைபனியால் காஷ்மீர் போல காட்சியளிக்கும் உதகை...

உறைபனியின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் குட்டி காஷ்மீா் போல் உதகை  காட்சியளிக்கிறது என சுற்றுலப் பயணிகள் தொிவித்துள்ளனர்.

உறைபனியால் காஷ்மீர் போல காட்சியளிக்கும் உதகை...

இயற்கை எழில்கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக இம்முறை பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் காந்தல், தலைகுந்தா, குதிரை பந்தைய மைதானம்  உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், குட்டி காஷ்மீா் போல் காட்சியளிக்கிறது. இந்த உறைபனியால்  இங்குள்ள லாரி,டாக்ஸி, ஆட்டோ ஓட்டுனா்கள் பகல் நேரத்திலேயே நெருப்புமூட்டிக் குளிா் காய்ந்து வருகின்றனா்.

இதனால் தொப்பிகள் மற்றும் கம்பளிகள் உள்ளிட்ட ஆடைகள் விற்பனை அளவு அதிகமாக உள்ளது எனறும்  உறைபனியில் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதனால், நாள்தோறும்  நடைபயிற்சி மேற்கொள்வோர் குளிர் ஆடைகளைப் போர்த்தியும், தீ மூட்டியும் தங்களை பாதுகாத்துக் கொள்கி்ன்றனா். மேலும் இதே போன்று காலநிலை தொடர்ந்து காணப்பட்டால் தேயிலைசெடிகள்,காய்கறிகள் கருகி விடும் அபாயம் உள்ளது என  அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.