Her stories புத்தக வெளியீட்டு விழா..! 

Her stories புத்தக வெளியீட்டு விழா..! 

இன்று கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஹெர் ஸ்டோரிஸ்  பதிப்பகம் சார்பாக 21 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. பாதை அமைத்தவர்கள், சந்திரகிரி ஆற்றங்கரையில், மானுடத்தின் மகரந்தங்கள், மற்றும் சில மதுரை பெண்கள், வைரமுடைய நெஞ்சு வேணும், நாங்கள் வாயாடிகளே, சட்டம் பெண் கையில், தண்டனை களமாகும் பெண்ணுடல், பெருங்காம பெண்களுக்கு இங்கே இடம் இருக்கிறதா? , குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்,  பூப்பறிக்க வருகிறோம், உலகை மாற்றிய தோழிகள்,  கதவு திறந்ததும் கடல், பாதைகள் உனது பயணங்கள் உனது,  விடுதலை களத்தில் வீர மகளிர்,  தடம் பதித்த தாரகைகள்,  இலங்கை எழுதி தீரா சொற்கள், வாழ்க்கை வாழ்வதற்கே, அகம் பெருவெளியில் தனி ஒருவள், நான் எனும் பேரதிசயம், அப்புறம் என்பது எப்போதும் இல்லை ஆகிய 21 நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு காவல்துறை ஆணையாளர்  தலைமை ஏற்று கு. மீனா நூல்களை வெளியிட்டு தலைமை உரை ஆற்றினார். 

மேலும் படிக்க | அரசு விழாவில் அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள். அமைச்சர் ஆதரவாளர்களிடையே சலசலப்பு

இவ்விழாவில் உமா மோகன், கவிதா முரளிதரன், கீதா இளங்கோவன், பிருந்தா சேது, மதுமிதா, தீபலட்சுமி, ரமாதேவி ரத்தினசாமி, ஜான்சி ஷகி ஆகியோர் நூல்களை அறிமுகம் செய்து உரை ஆற்றினர்