பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் குறித்த முழு விவரம் இதோ?

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி 3 ரூபாய் அளவுக்குக் குறைக்கப்படுவதாக, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அறிவிப்புகள் குறித்த  முழு விவரம் இதோ?

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

* புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர், பகுதிகளில் ஏற்படுத்தப்படும்

*தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடி செலவில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்

*நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதி தேவையை உறுதிசெய்ய 9,53,446 குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்

*குடிசைவாழ் மக்களை மனிதாபிமானத்துடன் மறுகுடியமார்த்த புதிதாக திட்டம் உருவாக்கப்படும்

*வீட்டுவசதித்துறையில் உலகவங்கித் திட்டங்களுக்கு ரூ.320.40 கோடி, ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171கோடி ஒதுக்கீடு

*அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட  தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீக்கு 4வழிச்சாலைகள் அமைக்கப்படும்

*அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

*இந்த பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

*புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக ரூ.703 கோடி ஒதுக்கீடு

*போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக  750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

*மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயான சேவை 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும் என அறிவிப்பு

*தமிழகத்தில்திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை,விருதுநகர்,விழுப்புரம்,நாமக்கல்,தேனி,நாகை, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும்

*குடிநீர் இணைப்பு,சுத்தம்,பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்க சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும்

*குவாரிகளுக்கு பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு பசுமை நிதியம் உருவாக்கப்படும்

*நீடித்த நிலையான சுரங்கத்தொழில் கொள்கை மூலம் வருவாய் பெருமளவில் அதிகரிக்கும் மற்றும் கைவிடப்பட்ட குவாரிகள் முறைப்படி மூடப்பட்டு பாதுகாக்கப்படும்

*அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புவியியல் புதைபடிவ பூங்கா அமைக்கப்படும்

*இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*இலவச பள்ளிச்சீருடைகள் விநியோகத்திட்டத்திற்கு ரூ.409.30 கோடி ஒதுக்கீடு

*துணிநூல் துறைக்கென தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்

*அறநிலைத்துறையைச் சேர்ந்த 187.91 ஏக்கர் கோவில் நிலங்கள் 100 நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.626 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

*மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்

*வேளாண்மைக்கான இலவச மின்சாரம்,வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

*100 திருக்கோயில்களில் ரூ.100 கோடியில் தேர் குளம் சீரமைக்கப்படும்

*12,955 கோவில்களில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி ரூபாய் நிதி நிலை உருவாக்கப்படும்

*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437.57 கோடியாக உயர்வு

*பழனி கோவில் மூலம் சித்த மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு சித்த மருத்துவ முறை மேம்படுத்தப்படும்

*சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

* மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது

*காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்த 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

*அங்கன்வாடி மையங்களில் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48.48 கோடி 

*புரட்சிதலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு

*விழுப்புரம், வேலூர், திருப்பூர்,தூத்துக்குடி உள்ளிட்ட 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

*ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்காக ரூ.14,696.60 கோடி நிதி ஒதுக்கீடு

*ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின முனைவர் படிப்புக்கான கல்வி உதவித் தொகை திட்டம் சீரமைக்கப்படும்

*நடப்பாண்டில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்

*கூடுதல் வகுப்பறைகள் ஆய்வுக் கூடங்கள் ஆகிய வசதிகளை மேம்படுத்த ரூ.123. 02 கோடி ஒதுக்கீடு

*மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு

*மகளிர் கல்வி,முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

*மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் 77.88% கல்வி தொடர்பான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

*மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*மாற்றுத்திறனாளிகளில் காத்திருப்பு பட்டியலிலுள்ள 9,173 பேருக்கு தலா ரூ.1,500 பராமரிப்புத்தொகை உடனே வழங்கப்படும்

*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 கோடி ஒதுக்கீடு

*ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்

*மின் உற்பத்தி போக்குவரத்துக்கழக நிதிச்சுமையை வெளிகொணரும் நிதி இடர்பாட்டு அறிக்கை தயாரிக்கப்படும் நிதி இடர்பாடு அறிக்கை 2022-23 பட்ஜெட்டில் வெளியிடப்படும்

*தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

*மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தரப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்

*கோவையில் ரூ.255 கோடி செலவில் 500 ஏக்கரில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்

*கோவை  பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காக்கள் மூலம் ரூ.3500 கோடி முதலீடு ஈர்க்கப்படும்

*சிப்காட் தொழில் பூங்காக்களில் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்த ரூ.1500 கோடி 

*வணிக வரி பத்திரப்பதிவுத்துறை,போக்குவரத்துதுறை,ஆயத்தீர்வை துறையில் வரி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியுள்ளது

*பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இதனால் பெட்ரோல் மீதான வரி குறைப்பால் அரசுக்கு ரூ,1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்-நிதியமைச்சர்

*மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் உள்ள ரூ.28000 கோடியை வசூலிக்க சமாதான் திட்டம்

*தமிழ்நாடு காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

*காவல்துறையில் காலியாக உள்ள 14,317 இடங்களை நிரப்ப நடவடிக்கை 

*தீ விபத்து இடத்திற்கு விரைவில் செல்ல தீயணைப்பு நிலையங்கள் அறிவியல்பூர்வ ஆய்வின்படி அமைக்கப்படும்

*அடுத்த 5ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கு போதிய கட்டிடங்கள் இருபது உறுதி செய்யப்படும்

*நீதித்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு ஆதரவு அளிக்கும்

*நீதித்துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1713.30 கோடி ஒதுக்கீடு

* எளிதில் வெள்ளப்பாதிப்புகளை ஏற்படும் 4,133 இடங்களை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்

* நிலம் கையகப்படுத்துதலை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்

*பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை

*தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு 30கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

*அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் மற்றும் 111 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்

*பாசனத்திற்காக மொத்தம் ரூ.6,607 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

*கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.9,370 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

*நதிநீர் பிரச்னைக்காக கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்

*தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு ரூ.303 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்

*கடல் பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு பொன்ற மற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்

*தரங்கம்பாடி, திருவொற்றியூர்,ஆற்காட்டுத்துறை மீன்பிடி துறைமுகத் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்

*புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க 6.25கோடி ரூபாயிம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

*ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்

*2021-22ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டிதரப்படும்

*1.27கோடி குடும்பங்களுக்கு  வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்

*அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரிட் வீடு கிடைப்பது உறுதிசெய்யப்படும்

*கிராமப்புறங்களில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்

*ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்

*ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்

*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு  நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3கோடி அளிக்கப்படும்

*கீழடி, ஆதிச்சநல்லூர்,கொற்கை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு மற்றும் கீழடியில் திறந்தவேளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்

*சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.500 கோடி சிறப்பு கோவிட் கடன் உள்ளிட்ட 20ஆயிரம் கோடி கடன் உறுதிசெய்யப்படும்

*36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்

*அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதைகள் அமைக்கப்படும்

*அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்

*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்

*திருச்சியில் புதிதாக இருங்கிணைந்த பேருந்து நிலையம்,வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்

*சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும் அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு

*தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் ஆயிரம் கோடி ரூபாயில் கலைஞர் நகர்புற மேம்பாடுத் திட்டம் செயல்படுத்தப்படும்

*தமிழகத்தில் உள்ள பழைமையாக அரசு கட்டடங்களை புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்

*சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்

*10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமாயமாக்கலை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை