போலி உத்தரவு வழக்கு: துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Published on
Updated on
1 min read

உயர்நீதிமன்றத்தின் போலி உத்தரவை தயாரித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் பழைய நகலை வைத்து, போலி உத்தரவை தயார் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்தக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தம், தங்கமணி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியநபரான  அமல்ராஜ் என்பவரைக் காப்பாற்றும் விதமாக, நாமக்கல் காவல் துறையினர், முறையாக  புலன்விசாரணை நடத்தாமல் குமாரபாளையம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பதாகக் கூறி,  எஸ்.பி., தலைமையில் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து, மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது.

நான்கு வாரங்களில், சிறப்பு குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாத அதிகாரிகளுக்கு எதிராக முகாந்திரம் இருந்தால், துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  குமாரபாளையம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உள்ள  வழக்கின் குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டு,  விசாரணையை, அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com