திமுக ஆட்சியில் ஹிந்து கல்வி மையங்கள் குறிவைக்கப்படுகிறது.! எச்.ராஜா குற்றச்சாட்டு.!

திமுக ஆட்சியில் ஹிந்து கல்வி மையங்கள் குறிவைக்கப்படுகிறது.! எச்.ராஜா குற்றச்சாட்டு.!

திமுக ஆட்சியில் ஹிந்து கல்வி மையங்கள் மட்டுமே குறிவைக்கப்படுகிறது என்று பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

இராமேஸ்வரம் வர்தினி மஹாலில் பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா செய்தியாளர் சந்திப்பில் மீனவர்கள் துப்பாக்கி சூடு  குறித்து மத்திய அரசிடம் தெரிவித்து இலங்கை அரசிடம் அழுத்தம் தெரிவிக்கப்படும் என செய்தியாளருக்கு பேட்டி

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வர்தினி மஹாலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் ,இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதுகுறித்து இன்று உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் தெரிவித்து இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுக்கப்படும் என்ற அவர், பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என தெரிவித்தார்கள் ஆனால் அணில் போன்ற கதைகளை தெரிவிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மின்சார வினியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் ஹிந்து கல்வி மையங்கள்  மட்டுமே குறிவைத்து தாக்க படுவதாகவும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமிய பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டில் இதுவரை வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதாகவும், ஹிந்து கல்வி மையங்கள் மீது குறிவைத்து தாக்கும் நோக்கத்தை திமுக கைவிடவேண்டும் என தெரிவித்தார்