தமிழ்நாடு
கிறிஸ்தவ ஆலய வளைவு அமைக்க இந்துக்கள் எதிர்ப்பு...!
சென்னை அடுத்த தாம்பரத்தில் அந்தோணியார் ஆலய வளைவு அமைக்க இந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ரமேஷ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு திருநீர்மலை சாலை நுழைவு வாயிலில் வளைவு அமைக்க ஆலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு அனுமதியளித்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜக மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பு மக்களிடையே மோதல் உருவாகும் சூழல் உருவானதால் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.