கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சி!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 30-ம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் இருமடங்கு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது 30 முதல் 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் 10 ரூபாய் உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரத்து குறைவால் காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.