எப்படி எல்லாம் திருடுறானுங்க !!! கதவு ரிப்பேர் பண்ணுவதுபோல் 40 சவரன் நகை திருடிய நபர்

எப்படி எல்லாம் திருடுறானுங்க !!! கதவு ரிப்பேர் பண்ணுவதுபோல் 40 சவரன் நகை திருடிய நபர்

வாஷிங் மிஷின் ரிப்பேர்

சென்னை மேற்கு மாம்பலம் ராஜீவ் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (70).. இவரது மனைவி பத்மாவதி(66).. இவர்களது மகளுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் சொந்த வீட்டில் முதல் தளத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் நேற்று வெங்கடேசன் வீட்டில் வாஷின் மிஷன் பழுதடைந்ததால் அதனை சரிசெய்ய ஆட்களை அழைத்து வருவதற்காக நேற்று மாலை வெளியே சென்றுள்ளார்.

மேலும் படிக்க | சாதாரணமான போலீஸ் விசாரணையயும் மனித உரிமை மீறலாக கருத முடியாது - நீதிமன்றம் பதில்

கதவும் உங்க வீட்டில் சரியில்லை

அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  வீட்டில் தனியாக இருந்த  பத்மாவதியிடம் தான் பிளம்பர் என்றும் சமையலறையில் உள்ள குழாய்யை சரிசெய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.. அப்போது பத்மாவதி குழாய் இல்லை வாஷின் மிஷின் சரிசெய்ய வேண்டும் என தெரிவித்து அவரை வீட்டினுள் அழைத்துள்ளார்.. பின்னர் அந்த நபர் வீட்டில் குழாய், மற்றும் வாஷின் மிஷனை பார்த்து விட்டு இதற்கு சில பொருட்கள் தேவைப்படுகிறது என கூறியதுடன் உங்க வீட்டு கதவு கூட சரியாக இல்லை என தெரிவிக்க உடனே பத்மாவதி அனைத்து கதவுகளையும் சாரிபாரத்து சொல்லுமாறு கேட்டுள்ளார். பின்னர் அந்த நபர் ஹால் கதவை சரிசெய்து விட்டு படுக்கையறை கதவை சரிசெய்ய சென்ற போது பத்மாவதி ஹாலி்ல் அமரந்திருந்தார்..வேலை முடிந்து அந்த நபர் பணத்தை பெற்று கொண்டு சென்றார்.

மேலும் படிக்க | ஈரோட்டில் வெற்றி அடையவேண்டும் என தேர்தல் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திய இபிஎஸ்!

கணவரிடம் நீங்க அனுப்புன நபர் வந்தார் என கூறல்

இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் பத்மாவதி நீங்கள் அனுப்பிய நபர் வந்து சென்றதாக தெரிவித்துள்ளார்.. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் நான் யாரையும் அனுப்பவில்லை என கூறிவிட்டு பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 40 சவரன் மதிப்புள்ள 15 தங்க வளைகள் திருடு்போனது தெரியவந்தது.. வீட்டிற்கு பிளம்பிங் செய்ய வந்த அடையாளம் தெரியாத நபர் பத்மாவதியை ஏமாற்றி நகைகளை திருடி சென்றதை அறிந்த வெங்கடேசன் இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்..