குடிதண்ணீரில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு....அமைச்சர் மெய்யநாதன் மீது சந்தேகம்....

குடிதண்ணீரில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு....அமைச்சர் மெய்யநாதன் மீது சந்தேகம்....

தமிழகத்தில் ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை ஆணையம் தலை இல்லாத முண்டமாக செயல்பட்டு வருகிறது கட்சியின் மாநில தலைவர் வசீகரன் குற்றச்சாட்டு.

கோரிக்கை மனு:

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல்  கிராமத்தில் விவகாரம் தொடர்பாக மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல ஆணையரை ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்துள்ளார்.

நீர்த்தொட்டியில்..:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நாட்டுக்கே அவமானமான ஒரு விஷயம் நடந்துள்ளது எனவும் நீர்நிலை தொட்டியில் மலத்தினை கலந்துள்ளனர் எனக் கூறிய வசீகரன்
மோசமான அருவருக்கதக்க செயலை அங்குள்ள மேல் ஜாதியினர் செய்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

தலை இல்லாத முண்டமாக:

பழங்குடியினருக்கு அவர்களுடைய பிரச்சனைகளையும், தேவைகளை காக்கவும், வளர்ச்சிக்காகவும் ஒரு ஆணையும் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் இதுவரை இந்த ஆணையம் எதையும் செய்யவில்லை எனவும் தெரிவித்த அவர் தலை இல்லாத ஒரு முண்டமாக இருப்பதற்கு பதிலாக இல்லாமலே இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

கிராமமே...:

இது தொடர்பாக FIR கொடுத்த  கனகராஜ் என்பவருக்கு மட்டும் தான்   உதவி கிடைத்துள்ளது எனவும் ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு கிராமமே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.  

அதிகாரமற்ற ஆணையம்:

அவர்கள் நடத்திய ஆய்வின் மூலமாக இந்த ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவதாகவும் இது மிக கேவலமாகவும், அவமானமாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  முதலமைச்சர் இப்படி ஒரு எந்தவித அதிகாரமும் இல்லாமல் இந்த ஆணயத்தை இயங்க வைத்து வருகிறார் எனவும் உறுப்பினர்கள் சம்பளம் இல்லாமல்  வேலை பார்த்து வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

 பெரிய அவமானம்:

இத்தனை நாட்கள் ஆகியும் மலத்தை கலந்தவர்களால் ஒரு அவமானம் என்றால், இதுவரையுமே அந்த தவறை செய்தவர்களை கண்டுபிடிக்காதது அதைவிட அவமானம் எனவும் இதுவரை எந்த நடவடிக்கையும், கைது செய்வதிலும்  தாமதம் ஏற்படுவதால் அந்த இடத்தில் உள்ள அமைச்சர் மெய்யயநாதன் மீது எங்களுக்கு சந்தேகம் எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?:

முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக இந்த  விவகாரத்தில் தலையிட்டு அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை தரவேண்டும் எனவும் தவறு செய்தவர்களை உடனடியாக  கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் வசீகரன்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குடியரசு தினவிழா......கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு