கடன் பிரச்சனையில் கணவன் மனைவி தற்கொலை? வீட்டை விட்டு வெளியே சென்ற மகன், மகளின் நிலை குறித்து விசாரணை?...

சென்னை கொளத்தூரில் கடன் பிரச்சனையால் தந்தை, தாய் தற்கொலை செய்துகொண்ட நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மகள், மகனின் நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
கடன் பிரச்சனையில் கணவன் மனைவி தற்கொலை? வீட்டை விட்டு வெளியே சென்ற மகன், மகளின் நிலை குறித்து  விசாரணை?...
Published on
Updated on
1 min read

சென்னை கொளத்தூரில் கோவிந்தராஜ், அவரது மனைவி பாரதி ஆகியோர் வசித்து வந்தனர். 
இவர்களுக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் உள்ளனர். பாக்கியலட்சுமி பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

தினேஷ் பெற்றோருடன் வசித்து வருகிறார். பாண்டிச்சேரியில் வசிக்கும் பாக்கியலட்சுமியின் மகளுக்கு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள  தாயார் வீட்டிற்கு  வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது.மேலும் கடன் தொல்லை அதிகமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மூத்த தம்பதியினர் கோவிந்தராஜ்- பாரதி ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மருமகன் பிரகாஷ் இன்று காலை மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்த போது இருவரும் உயிரிழந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த அவர்கள் இருவரின் உடல்களை மீட்டு விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தாய் வீட்டில் இருந்து இன்று காலை வெளியே சென்ற மகளும், மகனும் என்ன ஆனார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com