”நான் மறைந்த ஜெயலலிதாவின் சகோதரன்.... எனது தந்தையின் இரண்டாவது மனைவியே.....” வழக்கு தொடர்ந்த வாசுதேவன்!!!

”நான் மறைந்த ஜெயலலிதாவின் சகோதரன்.... எனது தந்தையின் இரண்டாவது மனைவியே.....” வழக்கு தொடர்ந்த வாசுதேவன்!!!

தனது தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவி மகளான ஜெயலலிதாவின் சொத்துக்களில் பாதியை பெற தனக்கு உரிமை உள்ளதால், தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி மைசூருவைச் சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

ஜெயலலிதாவின் சகோதரர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் எனக் கூறி, கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தையான  ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா என்றும், அவர்களின் ஒரே வாரிசு தான் மட்டுமே என்றும் மனுவில் கூறியுள்ளார்.

தந்தை ஜெயராமின் இரண்டாவது மனைவியான வேதவல்லி என்ற வேதம்மாவுக்கு, ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

உடன்பிறப்புகள்:
 
ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் தனது சகோதர சகோதரி என்றும், ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்டதால்,   சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடிவாரிசு என்பதால் தனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை பெற உரிமையுள்ளதாகக் கூறியுள்ளார்.
 
மறைக்கப்பட்ட உண்மை:

தான் உயிருடன் இருப்பதை மறைத்து ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததாகவும், அதனால் அவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்து 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

காலதாமதாமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தள்ளிவைப்பு:

இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக பதிலளிக்கும்படி, தீபா,  தீபக்-க்குக்கு உத்தரவிட்ட மாஸ்டர் நீதிமன்றம், விசாரணையை பிப்ரவரி 10ம் தேதி தள்ளிவைக்க்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    ”அதிமுக மட்டுமே காரணமில்லை........” பழனிவேல் தியாகராஜன்!!