சரியாக செயல்படாத கட்சி தான் அதிமுக...குற்றம்சாட்டும் டிடிவி!

சரியாக செயல்படாத கட்சி தான் அதிமுக...குற்றம்சாட்டும் டிடிவி!

அதிமுகவை செயல்படாத கட்சியாகவே பார்க்கிறேன் என்று அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வலைதளத்தை தொடங்கி வைத்த டிடிவி:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மேம்படுத்தப்பட்ட அமமுக-வின் வலைதளத்தை தொடங்கி வைத்தார். 

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி:

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அமமுகவின் வலைதளத்தை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். Ammk.com மூலம் கட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அண்ணாவின் நிலைப்பாடே எங்கள் கருத்து...ஆளுநர் குறித்து டிடிவி அதிரடி பேச்சு!

அதிமுகவை சாடிய தினகரன்:

தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வருவதற்கு இதற்கு முன்  ஆட்சியில் இருந்தவர்களே காரணம் என்று சுட்டிக்காட்டி பேசிய அவர், அதிமுகவை செயல்படாத கட்சியாகவே பார்க்கிறேன் என்றார். மேலும், தீயசக்தி திமுகவை எதிர்த்தே அமமுகவின் பயணம் இருக்கும் என்று தெரிவித்தார்.

அதன்படி, வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான கூட்டணி குறித்து 2023 ஆம் ஆண்டு இறுதியில் முடிவு செய்யப்படும் என்றும், அந்த தேர்தலில் அமமுக அணில் போல் செயல்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தெரிவித்தார்.