நான் அரசியல் பற்றி கருத்து சொல்லக்கூடாது... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி...

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அரசியல் குறித்து தான் கருத்து சொல்ல இயலாது நான் கவர்னராக உள்ள இரண்டு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.

நான் அரசியல் பற்றி கருத்து சொல்லக்கூடாது... ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில்  உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து அவனுடைய வரலாற்றை விளக்கும் புகைப்படங்களை அவர் பார்வையிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மரியாதைக்குரிய வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

இளைஞர்கள் எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் படியுங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ரசிகர்களாக இருங்கள் சுதந்திரத்திற்காக அவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால் நாம் இன்று சுகமாக நடமாட முடியாது. இந்தியாவில் முதன் முதலாக கப்பலை விட்டு வா.உ.சி. உள்ளிட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தேடித் தேடிப் படியுங்கள் என்ற அவர், 

பாரத பிரதமர் இந்திய சுதந்திரத்தின் 75வது சுதந்திர தினத்தை ஓராண்டு முழுவதும் கொண்டாட கூறியுள்ளார். குறைந்தபட்சம் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வேலை செய்த இடங்கள், படித்த இடங்கள் அவருடைய போராட்டங்கள் குறித்து தேடித்தேடி இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

மண்ணுக்காக போராடியவர் மண்ணெண்ணெய் விற்று கடனாளியாகி வறுமையில் உயிரிழந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், மொழிக்காகவும் நாட்டுப்பற்றுகாக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை அவர்கள் இருக்கும் காலத்தில் ஒவ்வொருவரும் போற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அரசியல் குறித்து தான் கருத்து சொல்ல இயலாது நான் கவர்னராக உள்ள இரண்டு மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.