ராஜாஜி, காமராஜர் பாதையில் அரசியலை தொடங்கினேன் - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

மக்களுக்கு பணியாற்றுவதில் முதல் படி உள்ளாட்சி அமைப்புகள்தான்  என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜாஜி, காமராஜர் பாதையில் அரசியலை தொடங்கினேன் - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

நாமக்கல்லில்  திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல என்றார். இந்த மாநாடு வெற்றியின் மாநாடு என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தின் அனைத்து கிராமங்களும் மாற வேண்டும் எனவும்  அது உள்ளாட்சி பிரதிநிதிகள் கையில் தான் உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

உள்ளாட்சி  பிரதிநிதிகளின் கையெழுத்து மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை என குறிப்பிட்ட முதலமைச்சர், மக்களின் நம்பிக்கையை பெற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

தந்தை பெரியார் ஈரோடு நகர்மன்ற தலைவராகவும், காமராஜர் விருதுநகர் நகராட்சிச் தலைவராகவும், ராஜாஜி சேலம் நகர்மன்ற தலைவராகவும், அறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கினர்: இன்று முதலமைச்சராக இருக்கிற நானும் சென்னை மேயராகவே எனது அரசியல் பயணத்தை தொடங்கினேன் என தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் அனைவரும்  தன்னிச்சையாக செயல்பட வேண்டும் எனவும் கணவா்களிடம் ஒப்படைக்க கூடாது எனவும் கேட்டு கொண்ட முதலமைச்சர்,  இனியும் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.  ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் சர்வாதிகாரியாக செயல்பட நேரிடும் என முதலமைச்சர் கூறினார்.

ராஜாஜி, காமராஜர் பாதையில் அரசியலை தொடங்கினேன் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!