டெல்லிக்கு சென்று யாருடைய காலிலும் விழவில்லை.. ஜெயக்குமார் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

டெல்லிக்கு சென்று யாருடைய காலிலும் விழவில்லை, தமிழ்நாட்டின் உரிமைக்காக தான் நான் சென்றேனே தவிர வேறு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயக்குமாரின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லிக்கு சென்று யாருடைய காலிலும் விழவில்லை.. ஜெயக்குமார் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை திருவான்மியூரில் உள்ள இராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார் இல்ல திருமணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

மணவிழாவில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை புரிந்தனர். மணமக்களை வாழ்த்திய பின் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

இது போன்ற திருமணங்கள் 1960-க்கு  முன்பு நடைபெற்றிருந்தால் அது செல்லுபடியாகாது என்ற நிலையில் தான் நடைபெற்றது என்ற அவர், 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சி வெற்றி பெற்று, அண்ணா முதல்வரான பிறகு, சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்ற தீர்மானம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணத்தின் போது பல கோடி ரூபாயை எடுத்து சென்றதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக நான் அறிந்தேன், அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அதற்கு அமைச்சர்களே பதிலளித்து விட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியின் மகன் என்ற தான், தமிழ் நாட்டிற்காக தான் உழைப்பான் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.