ராஜகோபுரத்தை பாலீஸ் செய்ய போனேன்.. 137 அடி உயரத்தில் ஏறி சம்பவம் செய்ய முயன்ற நபர்!! அப்புறம் என்ன ஆச்சி?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி உயர ராஜகோபுரத்தில் ஏறிய மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜகோபுரத்தை பாலீஸ் செய்ய போனேன்.. 137 அடி உயரத்தில் ஏறி சம்பவம் செய்ய முயன்ற நபர்!! அப்புறம் என்ன ஆச்சி?
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 137 அடி ராஜகோபுரம் உள்ளது. இதன் உச்சியில் 9 கலசங்கள் உள்ளன.

இந்நிலையில், 137 அடி ராஜகோபுரத்தின் கலசத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் ஏறியிருப்பது பக்தர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பக்தர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையிருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு  மீட்பு படையினர், கயிறு மற்றும் தார்பாய்களுடன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் ராஜகோபுரத்தின் மேல்பகுதிக்கு சென்றனர். அங்கு கலசத்தின் அருகே அமர்ந்து இருந்த மர்ம நபரிடம் நைசாக பேசி பத்திரமாக மீட்பு கீழே இறங்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் முத்து(24) என தெரியவந்தது.

மேலும் அவர் கூறுகையில், ராஜகோபுத்தின் சிற்பங்கள் பெயிண்ட் மற்றும் பாலீஷ் செய்யாமல் இருப்பதால் ராஜகோத்தை பாலீஸ் செய்ய சென்றதாக தெரிவித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜகோபுரத்தில் ஏறிய நபரை சுமார் ஒரு மணி நேரத்தில் தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com