"உயிருள்ளவரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன் " ரூபி அதிரடி!

"உயிருள்ளவரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன் " ரூபி அதிரடி!

காங்கிரஸ் கட்சியில் இனி தவறு நடக்காது என்றும்,  உயிருள்ள வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன் என்றும், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து இடைநீக்கம்:

சென்னை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்ற மோதல் விவகாரத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என மாநில தலைமை குற்றம் சாட்டியது. எனவே,  கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேற்று ஆஜராகும்படி நோட்டீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், குழுவின் முன்பு ஆஜராகாத காரணத்தால் ரூபி மனோகரை கட்சியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். 

இதையும் படிக்க: சிசிடிவியில் உள்ளது நான் இல்லை.. ! சுவாதி கண்ணீர் மல்க வாக்குமூலம்..!

ரத்து செய்த தலைமை:

பின்னர் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இரவே அந்த இடைநீக்க உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை ரத்து செய்தது. 

உயிருள்ள வரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன்:

இந்நிலையில்,  சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உயிருள்ள வரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன் என்றும், கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றுm, காங்கிரஸ் கட்சி  என்மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன், காங்கிரஸ் கட்சியில் இனிமேல் தவறு நடக்காது,  இதுவரை நடந்ததை விட்டுவிடுவோம். 2024 ராகுல் காந்தி நடைப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.