கையெழுத்தே இல்லாமல் மொட்டையாக வெளியான அதிமுக அறிக்கை!! ரத்தக்கண்ணீர் வடிக்கும் ரரக்கள் ...

கையெழுத்தே இல்லாமல் அதிமுக அறிக்கை வெளியாகியுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையெழுத்தே இல்லாமல் மொட்டையாக வெளியான அதிமுக அறிக்கை!! ரத்தக்கண்ணீர் வடிக்கும் ரரக்கள் ...

கையெழுத்தே இல்லாமல் அதிமுக அறிக்கை வெளியாகியுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் மே 14 ஆம் தேதி கூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று அறிவித்தனர். அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்தெடுக்க மே 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்நெதெடுக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

 

இந்நிலையில் சசிகலா அன்றாடம் தொண்டர்களுடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.  எல்.ஏ.க்களிடம் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார். ஒ. பன்னீர்செல்வமும் சசிகலாவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் அதிமுகவினர் வெளிப்படையாகப் பேசிவருகின்றனர்.

 

இந்தநிலையில், ஜூன் 21ஆம் தேதி, சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், அதிமுக,வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிக்குத் தேர்வு செய்வதற்கு வரும் 14ஆம் தேதி, அதிமுக எம்.  எல்.ஏ,கள் கூட்டத்தைக் கூட்ட அழைப்புவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துகள் இடம்பெறாமல் மொட்டையாக உள்ளதால், இந்த கூட்டத்தை யார் கூட்டுகிறார்கள் என்ற குழப்பத்தில் எம்.  எல்.ஏ.க்கள் உள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தன் தொகுதியான போடிக்கு சென்று நான்கு நாட்களை கடந்து விட்டது. இதேபோன்றும் எடப்பாடி பழனிசாமியிம் நேற்று காலை சேலத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் அதிமுக தலைமை கழக அறிக்கை வெளியாகியுள்ளது. பெயர் இல்லாவிடிலும் அறிக்கையை வெளியிடசொன்னது பழனிசாமிதான் என்றாலும், கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் எந்தமுடிவும் எடுக்கமுடியாது. எனவே இந்த கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் வருகை தருவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளதால், அதிமுகவின் தற்போதை இரு தலைமைகளும் முட்டிக்கொள்வது வெட்ட வெளிச்சமாக அம்பலமாகியுள்ளது.