பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரே மனிதர் ஜெயக்குமார் தான்....புகழேந்தி...!!

சசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினை இருந்திருக்காது என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரே மனிதர் ஜெயக்குமார் தான்....புகழேந்தி...!!
Published on
Updated on
1 min read

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை சரியாக நடத்தவில்லை என்றும் என்ன நடந்தாலும் சரி ஞாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை அதில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்றார். 

தர்மயுத்தம் அடிப்படையில் தான்  அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்று ஓபிஎஸ் இப்போது சொல்கிறார், இவர் தான் அன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு  ஊழல் அரசு, அம்மாவின் சாவில் மர்மம், சமாதியில் மெளனயுத்தம் செய்தவர் என்பதை யாரும் மறக்கவில்லை என கூறினார்.

அம்மாவின் மறைவிற்குப் பிறகு  அதிமுகவில் ஆட்சி மன்றக்குழுவிற்கு வேலை இல்லை என கூறிய அவர், எடப்பாடி பழனச்சாமிக்கு ஓபிஎஸ் ஜால்ரா அடிக்கிறார் என தெரிவித்தார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினை இருந்திருக்காது என்றும் கூறினார்..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com