16 வருடம் ஆகியும்...தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும்...சரத்குமார் ஓபன் டாக்!

16 வருடம் ஆகியும்...தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும்...சரத்குமார் ஓபன் டாக்!
Published on
Updated on
1 min read

தலைவன் சரியாக இருந்தால் தான், கட்சி சரியாக இருக்கும் என சமகவின் தலைவர் சரத்குமார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து 
மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமார், ஈரோடு கிழக்கு தொகுதி மட்டும் அல்ல..கட்சியின் எதிர்க்கால திட்டம் குறித்தும் இன்று  நிர்வாகிகள் உடன் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறியவர், இன்று மாலைக்குள் ஈரோடு கிழக்கு தொகுதி நிலைபாடு குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

கொங்கு மண்டலத்தில் சமக வுக்கு மக்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்த அவர், இந்த இடைத்தேர்தலில் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும்  விருப்பப்பட்டால் தேர்தலில் போட்டியிட தயார் எனவும், பிரச்சாரம் செய்ய நான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்பது தான் என் நிலைபாடு, ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கூட்டணியில் இணைந்தோம்.. அதனால், எதிர்வரும் காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பதை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மக்கள் நலனை முன் வைத்தே  சமகவின் அரசியல் பயணம் இருக்கும் என்றும் கூறினார்.

கடந்த 16 வருடமாக சமத்துவ மக்கள் கட்சி நல்ல நிலைக்கு வரவில்லை அதற்கு நான்தான் காரணம் எனவும், தலைவன் சரியாக இருந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் எனவும் வெளிப்படையாக சமகவின் தலைவர் ஒப்புக் கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com