காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்றாவிட்டால்.....விக்ரமராஜா ஆவேசம்!!!

காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்றாவிட்டால்.....விக்ரமராஜா ஆவேசம்!!!
Published on
Updated on
1 min read

கோரிக்கை நிறைவேறாவிட்டால் எந்த வித போராட்டமாக இருந்தாலும் அதில் நாங்கள் பங்கேற்ப்போம் விக்ரமராஜா ஆவேசம்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்து செங்கல்பட்டு பரனூர் சுங்ச்சாவடியில் கண்டன  ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில்நடைபெற்றது. 

பங்கேற்றவர்கள்:

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மாநில லாரி உரிமையாளர்கள் சமோலன தலைவர் தன்ராஜ் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

காலாவதியான....:

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய விக்ரமராஜா ”சுங்க கட்டணம் விலை உயரும் போதெல்லாம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.  அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழில் கட்டணம் உயர்வு ஆகியவை செய்யப்படுகிறது.  காலாவதியான சுங்கச்சாவடிகளில் குண்டர்களை வைத்து வாகனங்களில் பணம் பறிக்கும் செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.” என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் “காலாவதியான சுங்கச்சாவடிகளை கட்டாயமாக உடனடியாக அகற்ற வேண்டும்.  அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அமைப்புகள், இன்னும் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து எந்த வகையான ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அதிலும் நாங்கள் பங்கேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com