" கையில் செங்கோலை வைத்திருந்தால்.... தமிழகத்தையே வைத்திருப்பது போல நினைப்பு ....? " - கனிமொழி எம். பி.

" கையில் செங்கோலை வைத்திருந்தால்.... தமிழகத்தையே வைத்திருப்பது போல நினைப்பு  ....? "  - கனிமொழி  எம். பி.

ஒரு கையில் செங்கோலை வைத்திருந்தால் தமிழகத்தையே கையில் வைத்து இருப்பதாக மத்தியிலே ஆளுகிற அரசு நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என எம்.பி. கனிமொழி  கூறியுள்ளார்.


தென்காசி அருகே உள்ள கொடிகுறிச்சி கிராமத்தில் திமுக மாவட்ட  துணை செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான கனிமொழியின் புதுமனை புகுவிழாவிற்கு திமுக கழக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன்  குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு  கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

" ஒரு கையில் செங்கோலை வைத்திருந்தால் ஏதோ தமிழகத்தையே கையில் வைத்திருப்பது போன்று மத்தியிலே ஆளும் கட்சி நினைத்துக் கொண்டு இருக்கிறது.

Havan, puja & Sengol: PM Modi inaugurates new parliament - THE NEW INDIAN

தமிழகம் கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிறது. தமிழ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை சுக்குநூறாக்க நினைக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் யார்  நாடாளப் போகிறார்கள் என்பதை விட யார் நாட்டை ஆள வரக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இன்றிலிருந்தே பாடுபட வேண்டும்".  இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க     |   பள்ளிகள் திறப்பு: 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!