கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக நீக்கம்... செல்லூர் ராஜு ...!

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக நீக்கம்... செல்லூர் ராஜு ...!
Published on
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,  

சிறுபான்மையினரை அவமதிக்கும் கட்சியாக அதிமுக இல்லை, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார் என கூறினார். ,  

அதிமுகவில் இரட்டை தலைமை சிறப்பாக செயல்படுவதால் தான் அவைத் தலைவர் நியமனத்தில் முடிவை சரியாக எடுத்துள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் ஜாதியில்லை மதமும் இல்லை, 
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ன ஜாதி என்ன மதம், அதை பார்க்காமல் தான் 50 ஆண்டுகள் கழகம் செயல்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

 .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com