அவதூறு கருத்துக்களை பரப்பும் அண்ணாமலை... உடனடி நடவடிக்கை எடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்...

திராவிடர் கழகம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து போலீசார் உடையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவதூறு  கருத்துக்களை பரப்பும் அண்ணாமலை... உடனடி நடவடிக்கை எடுக்க கி.வீரமணி வலியுறுத்தல்...

கடந்த வாரம் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற் குச் சென்ற போது குன்னூர் அரு கே ஏற்பட்ட ஹெலி காப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படை தலைமை தளபதி மரணம் தொடர்பா க யூடியூபர் மாரிதாஸ் சில சர்ச்சை க் குரிய கருத்து களைப் பதிவிட்டதால் அவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். இதற் கு பாஜ க தலைவர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். குறிப்பா க, அண்ணாமலை திராவிட கழ கத்தின் துணை அமைப்பு கள் முப்படை தலைமை தளபதி உயிரிழப்பை க் கொண்டாடியதா க் கூறியது பெரும் சர்ச்சையை க் கிளப்பியது.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்த க் கருத்து க் குத் திராவிட கழ கத் தலைவர் கி. வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பா க அவர் வெளியிட்டுள்ள அறி க் கையில், "இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணித்தது குறித்து திராவிடர் கழ கத்தின் சார்பில் இரங் கலையும், வீர வண க் கத்தையும் 'விடுதலை' நாளேட்டில் 8.12.2021 அன்று வெளியிட்டுள்ளோம் உண்மை இவ்வாறு இரு க் க, 

'திராவிடர் கழ கத்தைச் சேர்ந்த அதி காரப்பூர்வமான துணை அமைப்பு கள் ஜெனரல் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடி இருப்பதா க' தமிழ்நாடு பா.ஜ. க.வின் தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பொய்யான கருத்து எங் கு, எப்பொழுது திராவிடர் கழ கம் பிபின் ராவத் இறந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விள க் கப்படவில்லை என்பதிலிருந்தே, இது பொய்யானது என்பது வெளிப்படையா கத் தெரி கிறது. 

திராவிடர் கழ கத்தின்மீது பொய்யான வ கையில் அபாண்டமா க அவதூறு பரப்பி, ம க் கள் மத்தியில் திராவிடர் கழ கத்தைப்பற்றி மோசமான அபிப்ராயம் உருவா கும் வ கையில் செயல்பட்டுள்ளார்.  தந்தை பெரியாரால் உருவா க் கப்பட்டு, 75 ஆண்டு களு க் குமேல் - ம க் கள் மத்தியில் நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பி க் கை இவற்றை எதிர்த்தும், சமூ கநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, ப குத்தறிவுப் பிரச்சாரத்தையும், செயல் பாடு களையும் மேற் கொண்டுவரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூ க சீர்திருத்த இய க் கத்தின்மீது அவதூறு பரப்பியுள்ள தமிழ்நாடு பா.ஜ. க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படியான உரிய நடவடி க் கை எடு க் குமாறு தமிழ்நாடு அரசையும், குறிப்பா க் காவல்துறையையும் கேட்டு க் கொள் கிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.