21 மாத ஆட்சியில் வரலாற்றில் இல்லாத சாதனை...சேகர்பாபு பெருமிதம்!

21 மாத ஆட்சியில் வரலாற்றில் இல்லாத சாதனை...சேகர்பாபு பெருமிதம்!
Published on
Updated on
1 min read

21 மாத கால திமுக ஆட்சியில் 510 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் கடந்த 21 மாத கால திமுக ஆட்சியில் 510 திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 112 கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். 

இதேபோன்று ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12,500 கோவில் விளக்கு தல ஒரு லட்சம் வீதம் வழங்கப்பட்டு வந்ததை தமிழக முதல்வர் 2 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளார்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழாவை ஒட்டி சமய சொற்பொழிவு பிரச்சனை தொடர்பாக அறநிலை துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பின்னர் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 500 கோயில்களில் விளக்குகளுக்கான தொகையை 1லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக சேகர்பாபு தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com