வட சென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...! ஏன் தெரியுமா..?

வட சென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு, பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வட  சென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...! ஏன் தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது நிலையில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2வது நிலையில் உள்ள இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் பராமரிப்பு மற்றும் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.