மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..? நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிப்பு  

தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளதாக டேன்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..? நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிப்பு   

தமிழ்நாட்டில் மேலும் 4 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளதாக டேன்ஜெட்கோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாக்குறை, தமிழகத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், வடசென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூரில் உள்ள டேன்ஜெட்கோவின் 5 அனல் மின் நிலையங்களில் சராசரியாக நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ’மத்திய மின்துறை அமைச்சகம்’ மற்றும் ’கோல் இந்தியா லிமிடெட்’ ஆகியவற்றுடன் டேன்ஜெட்கோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து நிலக்கரி வரத்து குறைந்ததால், தற்போது 1 புள்ளி 92 லட்சம் டன் மட்டுமே மொத்த கையிருப்பு உள்ளது.