நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு...அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு...அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை!

டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மதுரவாயலில் சிறுவன் ஒருவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்ததாலும், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிக்க : ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு...முன்விரோதம் காரணமா?

இதேபோல், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் வரும் 16-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி டீன்கள் மற்றும் இணை இயக்குநர்களுடன் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு ஹெல்த் மிக்ஸ் தொகுப்புக்கான ஒப்பந்தம் கொடுக்கப்படவில்லை என்றார். மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நிறுவனத்திற்குத்தான் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் உறுதிபடத் தெரிவித்தார்.